நாட்கணக்கில் காத்திருந்து,
கண் மூடாமல் பாத்திருந்து,
பேருந்திலே தொங்கிக் கொண்டு,
கடைக்கண் பார்வையை கண்டு,
குளிர்ந்து போனானாம்,
அவளது சின்ன சிரிப்பில்,
அரண்டு போனானாம்,
காதலுக்காக கேட்டாளாம்,
அன்னையின் இருதயம்,
கேட்டதிலே அவ்வளவு நயம்,
பாசத்தை கொன்று, எடுத்து
சென்றானாம்,
அவசரத்தில் முற்றம் இடிக்க,
இருதயம் கேட்டதாம்
" வலிக்குதாட மகனே ? "
No comments:
Post a Comment