Thursday, February 23, 2012

அழகான பெண்களுக்கு ஆயுசு கம்மி..

அழகான பெண்களுக்கு ஆயுசு கம்மி..
விரட்டி விரட்டி போனாலும்,
வேகமாக வண்டியை ஓட்டினாலும்,
மழையாய் கவிதை எழுதினாலும்,
மண்ணை கவ்வி கவ்வி தின்னாலும்,
பணத்தை நீராய் செலவு செஞ்சாலும்,
பித்தனாய் பின்னாலே திரிஞ்சாலும்,
முழம் மல்லிகை வாங்கி குடுத்தாலும்,
மலிபு வுக்கு டிக்கெட் வாங்கினாலும்,
பேருந்தில் படிக்கட்டில் தொங்கினாலும்,
இரவு முழுக்க கனவில் ஏங்கினாலும்,
அரியர்ஸ் வெச்சு தேங்கினாலும்,
அக்மார்க் நல்லவனா இருந்தாலும்,
அம்பானி பேரனாக இருந்தாலும்,
முரட்டு காளையை அடக்கினாலும்,
வங்கியில் பணத்தை முடக்கினாலும்,
காதல் முடிஞ்சு கல்யாணம்னு வந்தா,
அழகான பெண்களுக்கு ஆயுசு ரொம்பவே கம்மி..

Sunday, January 15, 2012

Kavitha Kumar - 4

கவிதா : நீ என்ன LOVE பண்ற இல்ல ?
குமார் : அதுல என்ன doubt ?
கவிதா : நான் கேட்ட கேள்விக்கு அது பதில் இல்ல...
குமார் : ஏய், நம்ம love பண்ண start பண்ணி 2 years ஆகுது..
கவிதா : நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லல...
குமார் : என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா ?
கவிதா : நீ என்ன LOVE பண்றியா ? இல்லையா ?
குமார் : இத பாரும்மா....கோவிச்சுகாத....
கவிதா : சே, அப்ப நீ என்ன LOVE பண்ணல இல்ல ?
...
...
...
காதலிக்கும் போது அவ கேள்வி கேக்குறத நிறுத்தறது இல்ல..
அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதும் இல்ல...

Kavitha Kumar - 3

கவிதா : அங்க என்ன பார்வை ?
குமார் : .........ஒண்ணும் இல்ல
கவிதா : என்கிட்ட சொல்ல மாட்டியா ?
குமார் : நெஜமாவே .........ஒண்ணும் இல்ல
கவிதா : என் கிட்ட இருந்து நீ எதையோ மறைக்கிற...
குமார் : அட , இல்லமா சும்மா தான் பாத்தேன் ...
கவிதா : அந்த நீல கலர் சுடிதார் பொண்ண தானே பாத்த ?
குமார் : எங்க ?!
.......CLUNK !!!

Kavitha Kumar - 2

கவிதா : எனக்கு ஒரு சத்தியம் பண்ணி குடு ..
குமார் : உனக்கு இல்லாததா .. என்ன வேணும் ?
கவிதா : என்கிட்டே எப்பவும் பொய் சொல்ல மாட்டேன்னு..
குமார் : சத்தியம் !
கவிதா : இல்ல .. உன்கிட்ட சத்தியமா பொய் சொல்ல மாட்டேன்னு சொல்லு ...
குமார் : அதான் சொன்னேனே ?!!
கவிதா : இல்ல .." பொய் சொல்ல மாட்டேன்னு நீ " சத்தியம் பண்ணல..
குமார் : சரி, சத்தியமா பொய் சொல்ல மாட்டேன் .. போதுமா ?
கவிதா : இல்ல ..நீ " என்கிட்டே " பொய் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணு ...
குமார் : உன்கிட்ட இனிமே சத்தியமா பொய் சொல்ல மாட்டேன் ! சதோஷமா ?!
கவிதா : சரி. குடுத்தா சத்தியத்த நீ காப்பாத்துவேன்னு எப்படி நம்புறது ?!
குமார் : [சபா..... இப்பவே கண்ண கட்டுதே ! ]
குமார் : [சத்தியம் பண்ண வரைக்கும் நான் பொய் சொல்லல.. நான் சொல்ற மொத பொய்யே இது தான் !!!]

Kavitha Kumar - 1

கவிதா : இந்த BLUE கலர் sari எனக்கு நல்லா இருக்கா ?
குமார் : நீ எது கட்டினாலும் நல்லா இருக்கும் ....
கவிதா : இது நல்லா இருக்கா ?
குமார் : இந்த sari நல்லா இருக்கு ...
கவிதா : நல்லா இருக்கா ? ரொம்ப நல்லா இருக்கா ?
குமார் : ரொம்ப நல்லா இருக்கு ....
கவிதா : சரி, அப்ப இந்த RED கலர் Sari ?!!

Saturday, January 14, 2012

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

மண்ணுக்குள்ள வைரம் பதிச்ச,
நம்ம வயிரை நிறைய வெச்ச,
தமிழனோட திருநாளாம்,
அது வருஷத்துல ஒரு நாளாம்,
பொங்கினது எல்லாமே பொங்கல்,
இதுவே நம்ம தை திங்கள்,
பழச எல்லாம் எரிச்சு போடு,
அலங்காரமா வரும் பசு மாடு,
ஊரெல்லாம் வலம் வருமே,
வீடெல்லாம் மணம் தருமே,
அனைத்தும் அர்ச்சனை பூக்கள்,
எல்லோருக்கும்,
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் !

Saturday, September 17, 2011

காதலிக்கு கல்யாணம் ..

காதலிக்கு கல்யாணம் ..

அவளுக்கு இத்தனை திமிரா ?
எத்தனை முறை மன்னித்தேன் !
சோறு தண்ணீர் மறந்து இருப்பேன் !
காலை மாலை காத்து இருப்பேன் !
கால் அமுக்கி விட்டு இருப்பேன் !
கவிதை எல்லாம் தந்து இருப்பேன் !
கலர் எல்லாம் கொடுத்து இருப்பேன் !
சுடிதார் எல்லாம் வாங்கி இருப்பேன் !
கோவிக்காமல் அடங்கி இருப்பேன் !
கோவிலுக்கு அவளால் போய் இருப்பேன் !
...
மண்டபத்தில் நுழைந்தவன் கையில்
மலர்செண்டு, அவள் நடுங்கினாள் ,
நேராக சென்றவன், அந்த எமாளியிடம்
சென்று சொன்னான் " BEST OF LUCK " !